Hook
More breakout videos from this creator.
China, India போன்ற நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து, இலங்கைக்குள் சேல்ஸ் பண்ணுகின்ற விஷயத்தில, சாதாரண ஆட்கள் என்ன நினைக்கிறாங்க அப்படின்னு சொன்னா, பெரிய அளவுல பெரிய முதலீடு செய்து, பெரிய குவாண்டிட்டி இறக்குமதி செய்து தான் விற்க முடியும். சாதாரண பொருட்களை சிறிய குவாண்டிட்டில, சிறிய முதலீடுகளை செய்து செய்ய முடியாது அப்படின்னு என்பது தான் பொதுவான ஒரு நம்பிக்கை. ஆனால் உண்மையிலே அப்படி இல்லை. 250 பீஸ் ஒரு ப்ராடக்ட்ல தேவை அப்படின்னு சொன்னாலும், 100 பீஸ் ஒரு ப்ராடக்ட்ல தேவை அப்படின்னு சொன்னாலும், அதை சைனால இருந்து இறக்குமதி செய்து இலங்கையில சேல்ஸ் பண்ணக்கூடிய ஈஸியான மெத்தட்கள் நிறையவே இருக்கிறது. உதாரணமா சைனால இருந்து மொத்தமாக ப்ராடக்ட்டை வாங்குவதற்கு, நேரடியாக ஆன்லைன்ல பர்சேஸ் பண்ணக்கூடிய வசதி தான் இந்த made-in-china.com அல்லது aliexpress.com அல்லது alibaba.com அல்லது jd.com இப்படி நிறைய வெப்சைட்டுகள் இருக்கிறது. இந்த வெப்சைட்டுகள் வந்து நமக்கு கொடுக்கிற பணத்துக்கு சரியான பாதுகாப்பு இருக்கும், ரீஃபண்டபிள் சிஸ்டம் இருக்கு, கம்ப்ளைன் பண்ணக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது, ஈஸியாக தொடர்பு கொள்ளக்கூடிய ஈமெயில், எஸ்எம்எஸ், போன் கால் அலர்ட் சிஸ்டம்கள் நிறையவே இருக்கின்றது. அப்போ நம்ம இந்த மாதிரியான வெப்சைட்டுகள்ல போயிட்டு, அந்த வெப்சைட்டுகள்ல என்ன பொருள் நமக்கு தேவை, எத்தனை குவாண்டிட்டி தேவை அப்படின்னு ஆர்டர் பண்ணதுக்கு பிறகு, நேரடியாக ஃபேக்டரில இருந்து நம்மள தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அப்போ ஃபேக்டரிக்கும் நமக்குமான தொடர்பு உண்டாகின்ற போது, மேனுஃபேக்டரிங் கம்பெனில இருந்து இதனுடைய குவாலிட்டி என்ன, குவாண்டிட்டி என்ன, சைஸ் என்ன, கெப்பாசிட்டி என்ன, இத மொத்த தகவல்களையும் அவருக்கும், அவங்களுக்கும் நமக்குமிடையிலான தொடர்பின் மூலம் நம்ம தெரிந்து கொள்ளலாம். அதற்கு பிறகு நம்ம பேமெண்ட் பண்ணுவதற்கு பிறகு, சாம்பிள் தேவை அப்படின்னா சாம்பிள் ஆர்டர் பண்ண முடியும். சாம்பிள் தேவையில்லை ப்ராடக்ட் ஓகே அப்படின்னு தெரிஞ்சதுக்கு பின்னக்கு நம்ம ஆர்டர் பண்ணோம் அப்படின்னு சொன்னா, அதற்கு பிறகு இரண்டாவது அவதானிக்க வேண்டும், சைனால இருந்து இலங்கைக்கு பொருட்களை கொண்டு வரக்கூடிய கார்கோ கம்பெனிகள். விமானம் மூலம் அல்லது தரைமார்க்கம் மூலம், கப்பல் வழி மூலம் ப்ராடக்ட்டை கொண்டு வருவதற்கான ஷிப்பிங் கம்பெனிகளை கண்டுபிடிக்கணும். அது பெரிய கண்டெய்னரால மட்டும் இல்லாமல், சின்ன சின்ன சிபிஎம் கணக்குல, அதாவது சதுர அடி, சதுர மீட்டர், ஸ்கொயர் மீட்டர் கணக்குல பொருட்களை கொண்டு தர, அதாவது ஒரு காட்டன் இருந்தாலும், பத்து காட்டன் இருந்தாலும், என்ன சைஸ்ல அந்தந்த சைஸ்க்கு ஏற்ப அவர்கள் சார்ஜ் பண்ணுவார்கள். ஷிப்பிங் கோஸ்ட் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அப்போ நமக்கு பத்து காட்டன் மட்டும் வேணும்னு சொன்னால், பத்து காட்டனுக்கு எவ்வளவு என்பதை நம்முடைய ஷிப்பிங் கம்பெனி நமக்கு தெரியப்படுத்துவாங்க. அப்போ நம்ம இங்க அவதானிக்க வேண்டும், நம்முடைய ப்ராடக்ட் கோஸ்ட் எவ்வளவு வருகிறது, ஷிப்பிங் கோஸ்ட் எவ்வளவு வருகிறது. இது இரண்டையும் மெயினாக நம்ம கூட்டி போட்டு, இதை பிரிப்பதன் ஊடாக இலங்கையில நமக்கு இந்த பொருள் வந்து சேருகின்ற போது, சைனால இருந்து இலங்கைக்கு நம்முடைய பொருள் வந்து சேருகின்ற போது, நமக்கு எவ்வளவு கோஸ்ட் ஆகிறது. இதற்கு பிறகு நம்ம எவ்வளவு லாபம் வச்சு விற்க முடியும் என்பதை நம்மளால கால்குலேட் பண்ண முடியும்மாக இருந்தால், ஈஸியாக குறைந்த தொகையிலான பொருட்களை கூட சைனால இருந்து வாங்கி நமக்கு இலங்கையில விற்க முடியும். இன்பாக்ஸ்ல அல்லது கமெண்ட்ல சைனா ப்ராடக்ட் அப்படின்ற மெசேஜ் பண்ணுங்க, கூடுதல் விவரங்களுக்காக வேண்டி.