Hook
More breakout videos from this creator.
நண்பர்களே, இன்னும் ஒரு நற்செய்தியுடன் உங்களை சந்திப்பதிலே சந்தோஷமடைகின்றேன். நான் ரில்வான். ஊஹிபு கன்சல்டிங் வழியாக நிறைய புதிய பிசினஸ்களை தொடர்ந்தும் சொல்லிக்கொண்டு வருகின்றோம். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஈஸி பிசினஸ் சம்பந்தமாக அல்லது ஹோம் பேஸ்ட் பிசினஸ் சம்பந்தமாக ஒரு ஈ-புக் வெளியிட்டிருந்தோம். அதிலே நிறைய சகோதரர்கள் அந்த புக்கை வாங்கி படிச்சிருக்காங்க, படிச்சுக்கொண்டு இருக்காங்க. கண்டிப்பா வாங்கி அவங்க படிச்சவங்க அது சம்பந்தமான ஃபீட்பேக்க கொடுங்க. அது வந்து எங்களுடைய அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ரொம்ப உதவியா இருக்கும். இன்று இந்த வீடியோவிலே நற்செய்தி என்னவென்று சொன்னால் புதிய ஒரு புக்கினூடாக உங்களை சந்திக்கின்றேன். இது என்ன பிசினஸ் செய்யலாம் அப்படின்ற புக். இது 200 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்திலே 19 வகையான பிசினஸை பற்றி சொல்லியிருக்கிறேன். நடுத்தர அல்லது பெரிய அளவில் செய்யக்கூடிய 19 வகையான பிசினஸ். இதை சின்ன லெவல்ல கூட செய்யலாம். புதிய மார்க்கெட்ல டிமாண்டா உள்ள அதே நேரம் போரிங் பிசினஸ் லிஸ்ட்ல உள்ளவைகள். இது ஒவ்வொரு பிசினஸையும் நீங்க படிக்கும்போது அல்லது உள்ளடக்கத்துல போயிட்டு 19-ல ஒன்றை நீங்க சூஸ் பண்ணி வாசிச்சுட்டு இந்த புக்க போட்டுறாதீங்க. ஒவ்வொரு பிசினஸ் மாடல்களையும் புதிய புதிய ஸ்ட்ரேட்டஜிகளை மேக்ஸிமம் ட்ரை பண்ணி இன் பண்ணியிருக்கிறேன். இந்த புக்குடைய ஆரம்பத்திலேயே சேல்ஸ்னா என்ன, மார்க்கெட்டிங்னா என்ன அப்படின்னு சொல்லியிருந்தாலும் ஒவ்வொரு பிசினஸ் மாடல்களையும் புதிய புதிய மார்க்கெட்டிங் ஸ்ட்ரேட்டஜிகளை சொல்லியிருக்கிறேன். சில பிசினஸ்கள்ல ஸ்வாட் அனலிசிஸை சொல்லியிருக்கிறேன். சில பிசினஸ்கள்ல பட்ஜெட்டிங் பற்றி சொல்லியிருக்கிறேன். சில பிசினஸ்கள்ல ரிஸ்க் எப்படி ஹேண்டில் பண்றதுன்னு சொல்லி சொல்லியிருக்கிறேன். இந்த பிசினஸை பற்றி தெரியாத ஒரு சமூகத்தை எப்படி விழிப்புணர்வு படுத்துறது அப்படின்ற விஷயத்தை கூட சொல்லியிருக்கிறோம். அதனுடைய அர்த்தம் வந்து மொத்தமா இந்த புக்கை வாசிக்கும் போதுதான் ஒரு பிசினஸை சரியான முறையில செய்றதுக்கு அது ரொம்ப வழிகாட்டியா அமையும் அப்படின்னு நான் நம்புறேன். இந்த புக்குடைய பிடிஎஃப் தேவையானவங்க இந்த வீடியோவில அல்லது எங்களுடைய சேனல்ல அல்லது இன்பாக்ஸ்ல பிடிஎஃப் அப்படின்னு சொல்லி இது பண்ணுங்க. இந்த புக்குடைய பெயர் என்ன பிசினஸ் ஆரம்பிக்கலாம். கோ பேத்வே யுவர் பிக் நெக்ஸ்ட் ஸ்டெப் அப்படின்னு இந்த புக்கை வந்து 200 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம். அந்த புக்குல உள்ள எந்த பிசினஸ் ஐடியாவும் இந்த புக்குல இல்லை. அதை வாங்குனவங்களும் இதை வாங்கலாம். இதை கூட தனியா வாங்கி படிக்கலாம். பிசினஸ் செய்றதுக்கு என்ன பிசினஸ் செய்யலாம் அப்படின்னு தெரியாதவங்க யோசிச்சுக்கொண்டு இருக்கிறவங்க, எங்க இன்வெஸ்ட்மென்ட் பண்ணலாம் அப்படின்னு யோசிக்கிறவங்க இந்த பிசினஸ் உங்களுக்கு ரொம்ப பெரிய ஆன்சரா அமையும் அப்படின்னு நம்புறோம்.